மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் உரிமையாளரும் உலகப் புகழ்பெற்ற செல்வந்தர்களில் ஒருவருமான பில்கிட்ஸ் இலங்கை விவசாயத்தை மேம்படுத்துவதற்காக முன்வந்துள்ளார் .
இதற்கன ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் பிள்கேட்ஸ் அறக்கட்டளையுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்தை அதிகரிக்க மென்பொருள் ஒன்றினை அறிமுகப்படுத்தவும் பிள்கேட்ஸ் அறக்கட்டளை முன்வந்துள்ளது.
பிள்கேட்ஸ் மற்றும் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளையின் அதிகாரிகள் கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்த போது இந்த திட்டத்திற்க்கு தமது இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேசமயம் உரப்பாவனையின் மூலம் உற்பத்தித் திறனை நேரடியாகப் பெறுவதற்கும், சரியானமுறையில் பேணுவதற்கும் தேவையான வழிகாட்டல்களை புதிய மென்பொருள் வழங்கும் என ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஆரம்பக்கட்ட கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments