பாடசாலைகள் அடுத்தவாரம் திறக்க ஏற்பாடு.


தற்காலிகமாக தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைகள் அடுத்தவாரம் திறக்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கந்தகாடு புணர் வாழ்வு முகாமில் ஏற்பட்ட கொரோணா தொற்றாளர்களை சரியாக அடையாளம்கண்டு, அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளதாக இராணுவத்தளபதி மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர்  ஆகியோர்  அரசாங்கத'திற்கு உறுதிப்படுத்ததியுள்ளனர் என அமைச்சரவையின் இணைப்பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்  சந்திப்பில் அவர்  இதனைக் கூறியுள்ளார்.  

அடுத்தவாரம் பாடசாலைகளை ஆரம்பித்த பின்னர்  பரீட்சைகளை சரியான முறையில்  நடத்த முடியும் என அரசாங்கம் நம்புவதாகவும் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
Reactions

Post a Comment

0 Comments