இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் : எச்சரிக்கை!



#Corona    #Covid-19       #Colombo        #Gambaha        #Public Transport  #Tamil News    #Sri Lanka
கொரோனா வைரஸ் (Covid-19) பரவலை தொடர்ந்து பொதுப்போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டடிருந்த கட்டுப்பாடுகள்   தளர்த்தப்பட்ட நிலையில்  இன்று பொது போக்குவரத்து வழமைக்கு  திரும்பியுள்ளது.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும்  அதிக அச்சுறுத்தலுக்குட்பட்டிருந்த மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா   மாவட்டங்களுக்கு போக்குவரத்து செய்யமுடியும் முடியுமென அறிவிக்கப்பட்டடுள்ளது.  

மேலும்.  இலங்கையில் சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் பரவுவது முற்றாக இல்லாமல் செய்யப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதிலும் திறந்து விடப்பட்டிருக்கும் பொதுப் போக்குவரத்து காரணமாக மீண்டும் கொரோனா  தொற்று  ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாகவும், அவ்வாறு ஏற்படுமாயின்  நாடு பாரிய விளைவுகளை சந்திக்க  நேரிடும்  எனவும் சுகாதர சேவைகள் பனிப்பாளர்  வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
Reactions

Post a Comment

0 Comments