சர்வதேச ரீதியில் கொரோனாநோயாளிகள் விரைவாக குணமடையும் நாடுகள் பட்டியலில் இலங்கை.


உலகளாவியரீதியில்  இலங்கை கொரோனா நோயாளிகள் விரைவாக குணமடையும் நாடுகள்  பட்டியலில் முன்னணி வகிப்பதாக சுகாதார மேம்பாட்டு  பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றில்  இருந்து  மீண்டவர்களை  உலகின் மிக முக்கிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை 56.86 % வீதத்தில் உள்ளது 

உலகில் அதிக கொரோனா  மரணங்களை பதிவு செய்த  அமேரிக்கா வில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் 38.56% வேதத்திலும்,  பிரேசிலில் 43.88% வீதத்திலும் உள்ளதாக குறிப்பிடப்பட்டடுள்ளது.

உலகளாவிய ரீதியில்  மரணங்கள் மிகவும் குறைந்த நாடுகள் படடியலிலும் இலங்கை முன்னணி வகிப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தவர்கள் 0.59 % என்கின்ற  மிக்க குறைந்த அளவேயாகும் என குறிப்பிடப்படுகின்றது.
Reactions

Post a Comment

0 Comments