அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிச்சடங்கில் கலந்துக்கொண்டவர்களுக்கு கொரோனா அறிகுறி.


#Covid-19    #Corona Virus    #Tamil Hot News    #Sri Lanka
அமரர் ஆறுமுகம் தொண்டைமானின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட  சிலருக்கு கொரோனா தொற்றின் அறிகுறிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலையகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரும் , அவரது வீட்டில் இருந்துவரும் சாரதி ஒருவரும் நேற்றைய தினம் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களை 14 நாட்கள் சுயதணிமைப்படுத்த  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கொட்டகலை  பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர் ராகவன் தெரிவித்துள்ளார். 

குறித்த ஊடகவியலாளர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த  பத்தரமுல்லையிலுள்ள அவரது வீட்டிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகத்திற்கும்  சென்றுள்ளார்.

அவர் செய்தி சேகரிப்பதற்காக அந்த பிரதேசத்திற்க்கு சென்று திரும்பியுள்ளார்.பின்னர் இறுதிக்கு கிரிகையிலும் கலந்து கொண்டதன் பின்னரே அவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நோய் அறிகுறிகள் தென்பட் டதனை  அடுத்து ஊடகவியலாளர் டிக்கோயா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது  பீ.சி. ஆர்  பரிசோதனை மேற்கொள்ளப்படுள்ளது.  

Reactions

Post a Comment

0 Comments