இலங்கை மக்களுக்கு மற்றுமொரு ஆபத்து! வைத்தியர்கள் எச்சரிக்கை!


#tamil hot news    #tamil news    #Disaster    #Sri Lanka

இலங்கையின் பல பகுதிகளில் எலிசிக்காய்ச்சல்  வேகமாக பரவும் ஆபத்துகள் உள்ளதாக தொற்று நோய்  பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில்  நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பரவிவரும்  எலிக்காய்ச்சலின்  ஆபத்துகள் அதிகரித்துள்ளது. 
 
பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கவும், எலிக்காய்ச்சல் பாக்டீரியா மூலமாக பரவும் ஒரு நோயாகும். எலி, பெருச்சாலி, எருமை மாடு போன்றவற்றினால் இந்த பாக்டீரியா பரவுகின்றது.

இந்த காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக திடீர் காய்ச்சல், தொண்டைப் புண், தசைவலி, மற்றும் முதுகுவலி,  போன்ற அறிகுறிகள் காணப்படும். இதற்கு  மேலதிகமாக கண் சிவத்தல், வாந்தி, தலைவலி, மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் வெளியேற்றத்தில்  குறைவு போன்ற அறிகுறிகளே காணப்படுகின்றன.

இவ் அறிகுறிகள் காணப்படும் பட்ஷத்தில் உடனடியாக வைத்தியாரை நாடவேண்டும் , ஆரம்பத்திலேயே வைத்தியசாலை சென்றால் இலகுவாக காப்பாற்றிவிடலாம். என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ், டெங்குகாய்ச்சல் போன்றன தீவிரமடைந்துள்ள நிலையில் எலிக்காய்ச்சல் தொடர்பாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reactions

Post a Comment

0 Comments