இலங்கையில் கொரோனா தொற்றினால் 11 ஆவது உயிரிழப்பு இன்று பதிவாகியுள்ளது.



குவைத் நாட்டிலிருந்து நாடு திரும்பிய ஆண்  ஒருவரே உயிரிழந்துள்ளார், இவர் கோவிட்  19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு ஹோமாகம  வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்றுவந்த 45 வயதுடையவர். என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை இலங்கையில் 1633 பேருக்கு கொரோனா தோற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் இன்றுவரை 801  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 821 பேர் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் மாற்றும்  இன்றுடன் 11 பேர் இறந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
Reactions

Post a Comment

0 Comments