தர்பூசனியை ஏன் இரவில் சாப்பிடக்கூடாது??




கோடைகாலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழம்  தர்ப்பூசனி, இதில் ஏராளமான நன்மைகள் நிரம்பியிருப்பதனால் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுகின்றனர்.

தர்ப்பூசணி கோடையில் ஏற்படும் தாகத்தையும், நா வறட்சியையும்  தணிக்கும் ஒரு அற்புத பழமாகும்.

தர்பூசணி உலகளவில் அதிகமாக பயிரிடப்பட்டுள்ள பழம். தர்பூசணியில் 1000 த்  திற்கும் மேற்பட்ட  வகைகள் உள்ளன. 92 சதவீதம் தண்ணீரை உள்ளடக்கிய இப் பழத்தினை  கிராமப்  புறங்களில் தண்ணீர்ப் பழம்  என்றே அழைக்கின்றனர்.

இவ்வளவு சத்து நிறைந்த தர்பூசணியை இரவு நேரத்தில் ஏன் சாப்பிடக் கூடாது??

  •    தர்பூசணி ஒரு இயற்க்கையான குளிரூட்டியாக இருப்பதனால்,  பல நன்மைகள் கிடைக்கின்றன, அனால் சிலர் படுக்கைக்கு செல்வதற்க்கு  முன்பு அவற்றை இரவு உணவாக சாப்பிட விரும்புகின்றனர், அனால் இரவு நேரங்களில் உட்க்கொள்வது பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
  •     தர்பூசணி அதிக நீர் மற்றும் அமில உள்ளடக்கம் கொண்டுள்ளது அதனால் இரவில் தர்பூசணியை சாப்பிட்டால் உங்கள் செரிமானத்தை சிக்கலாக்கும். சில சந்தர்ப்பங்களில், இது குடல் எரிச்சலுக்கு வழிவகுக்கும்.
  •     தர்பூசணியில் நிறைய சர்க்கரை இயற்கையாக உள்ளது, இரவில்  இதைச் சாப்பிடுவதால்  அதில் உள்ள சர்க்கரை உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

  •     சந்தையில் உள்ள பல பழங்கள்  அவற்றின் இனிப்பை அதிகரிக்க ரசாயனங்கள் மூலம் கூர்மையாக்கப்படலாம், இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்,

  •     தர்பூசணியில் 92% நீர் உள்ளது, இரவில் இதனைச் சாப்பிட்டால் அடிக்கடி கழிப்பறைக்குச் செல்ல வேண்டி ஏற்படும்.
  •     இது உங்கள் தூக்கத்தைக் கெடுக்கும், மனா அழுத்தத்தைக் உருவாக்கும். சில சந்தர்ப்பங்களில், தர்பூசணியை கட்டுப்பாட்டுடன் சாப்பிடாவிட்டால், உடலில் தண்ணீரைத் தக்கவைத்துக் கொள்வதில் சிக்கல் ஏற்படும். இதனால் வீக்கம் மற்றும் அதிக நீரிழப்பு ஏற்படும். 


Reactions

Post a Comment

0 Comments