ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரிகையில் பங்கேற்றோருக்கு எச்சரிக்கை.



அமரர்  ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரிகைகளில் பங்கேற்ற எவருக்கேனும்  கொரோனா  தொற்று ஏற்பட்டால்  உள்நாட்டு  மற்றும் சர்வதேச  ரீதியில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்  என பொதுச் சுகாதார பரிசோதகசர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இறுதிக் கிரிகைகளில் பங்கேற்ற எவருக்கேனும் புதிதாக கொரோனா நோய்த் தொற்று  ஏற்பட்டு  அதன் மூலம் புதியதொரு நோய்த் தொற்று கொத்தணி  உருவாகினால் அதற்குப் பொறுப்பான அணைத்து தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்  என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தனிமைப்படுத்தல்  சட்டங்களை உதாசீனம் செய்து அமரர் தொண்டைமானின் இறுதிக்கு கிரிகை நிகழ்வுகள் நாடாத்தப் படுவதாக குற்றம் சுமத்தப் பட்டுள்ளது.

அரசியல் நோக்கங்களுக்காக இறந்தவரின் பூதவுடலை வைத்துக்கொண்டு பிரச்சாரத்தில் ஈட்டுபட்டு வருவதற்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்   எனவும் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
Reactions

Post a Comment

0 Comments