நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்ட கால வரையறையில் தளர்வு.





கொழும்பு மற்றும்  கம்பஹா உட்பட நாடளாவிய ரீதியில் தற்போது அமுல் படுத்தப்பட்டுள்ள  ஊரடங்கு  சட்டம் மே  26ம் திகதி  இலிருந்து  இரவு 10.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரையில் மாத்திரம் அமுல் படுத்தபடவுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது,

இதற்கமைய மே  26 ம் திகதி முதல் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களுக்கிடையில் பயணத்தை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று  மே  24 ம் திகதி  இரவு 8.00 மணி முதல் 26ம் திகதி அதிகாலை 5.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில்  இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது,
 
Reactions

Post a Comment

0 Comments