இன்றிரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுலில்



இலங்கையில் தளர்த்தப்பட்டிருந்த  ஊரடங்கு இன்றிரவு 8 மணி முதல் மீண்டும் அமல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இன்றிரவு 8 மணி  முதல்   எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி அவரை இவ்  ஊரடங்கானது  அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் மாத்திரம் தொடர்ந்தும் ஊரடங்கு மறுஅறிவித்தல் வரை அமலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மார்ச் மதம் 20 ஆம் தேதி முதல் இன்று வரையான காலப் பகுதி வரை ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இலங்கையில் 55 ஆயிரத்து 700ற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

அத்துடன், 15 ஆயிரத்தி ற்கும் அதிகமான வாகனங்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ள அதேவேளை, ஊரடங்கு சட்டத்தை மீறியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் போலீஸார் அறிவித்துள்ளனர்.
Reactions

Post a Comment

0 Comments