கொரோனா வைரஸ் சமூகத்திற்குள்  பரவுவதனால்  அதிக ஆபத்துக்கள் உள்ளதாக தோற்று நோய்  விஞ்ஞான பிரிவின் பிரதானி  விசேட வைத்தியர்  சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

வெளிசரை கடற்படை முகாமில் கடற்படையினருக்கு கொரோனா தொற்றிய போது  நாடு  முழுவதும் மூடப்பட்டிருந்த போதிலும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையம்  ஊடக ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும்  போது  நாடு திறக்கப்பட்டிருக்கின்றமையினால் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கடும் அவதானத்துடன் இருப்பது அவசியமாகும்.

 கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையுடன் அங்கு விடுமுறை பெற்று வீடுகளுக்குச் சென்ற ஊழியர்கள், பாடசாலைகள், கூட்டங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளமையினால்  அவர்களுடன் பழகியவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். தோற்றாளர்களினால் வைரஸ் சமூகத்திற்குள் இலகுவாக பரவ கூடும், இதுவரையில் சமூகத்திற்குள் பரவிய கொரோனா நோயாளிகள் ராஜாங்கன, யாய உட்பட 6 பிரதேசங்களிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலைக்கமைய வைரஸ் சமூகத்திற்குள் தீவிரமாக பரவுவதற்கு அதிக ஆபத்துகள் உள்ளது. இதன் காரணமாக மக்கள் பயணங்களை குறைத்துக்கொள்வது கட்டாயமாகும். அத்தியாவசிய விடயங்களை தவிர்த்து பயனங்கள் மேற்கொள்வதனை  தவிர்த்துக்கொள்ளவும்..

எங்களிடம் சிறியளவு வளங்கள்ளே  உள்ளது. வைரஸ் சமூகத்திற்குள் பரவினால் இங்குள்ள வைத்தியசாலைகள் போதாது. அதேபோல் தீவிர சிகிச்சை பிரிவும் போதாது என அவர் மேலும் தெரிவித்தார்.